அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்குவது 17-ந்தேதி வரை நீட்டிப்பு வைத்திலிங்கம் எம்.பி. அறிக்கை

அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்குவது 17-ந்தேதி வரை நீட்டிப்பு வைத்திலிங்கம் எம்.பி. அறிக்கை
x
தினத்தந்தி 3 May 2020 4:20 AM IST (Updated: 3 May 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்குவது வருகிற 17-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர், 

தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்குவது வருகிற 17-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

பல்வேறு நடவடிக்கை

இதுகுறித்து தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந்தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்கான அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வர உரிய நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் வேலைக்கு செல்லமுடியாமல் தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் பசியினை போக்குவதற்கு ஏதுவாக தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்க இன்று(ஞாயிற்றுக்கிழமை) வரை அறிவிக்கப்பட்டிருந்தது.

17-ந்தேதி வரை நீட்டிப்பு

இந்தநிலையில் தஞ்சை திலகர் திடல் அருகே உள்ள அம்மா உணவகம் மற்றும் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் ஆகியவற்றில் மக்களுக்கு காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் விலையில்லா உணவு வழங்குவது வருகிற 17-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story