திருப்பனந்தாள் அருகே தாய்-மகனுக்கு கொரோனா பரிசோதனை
திருப்பனந்தாள் அருகே தாய்-மகனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பனந்தாள்,
திருப்பனந்தாள் அருகே தாய்-மகனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மகன் வீட்டுக்கு சென்ற பெண்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சாவடி நடுத்தெருவை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் கடந்த 30-ந் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே திருலோக்கி பகுதியில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா பரிசோதனை
இதனால் அந்த பெண்ணுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக திருலோக்கி கிராம நிர்வாக அதிகாரி தினேஷ்குமார், திருவிடைமருதூர் தாசில்தார் சிவகுமாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் தாசில்தார் சிவக்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை கொண்ட குழுவினர் திருலோக்கி பகுதிக்கு சென்று அங்கு மகன் வீட்டில் தங்கி இருந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அவருடைய மகனுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் முடிவுகள் வராத நிலையில், 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண், அவருடைய மகன் மற்றும் குடும்பத்தினர் உள்பட 5 பேரை தனிமைப்படுத்துவதற்காக அதிகாரிகள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story