சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் நெல்லையில் 2 காய்கறி கடைகள் அடைப்பு
நெல்லை மாநகராட்சி பகுதியில் அனுமதி இல்லாத இடத்தில் காய்கறி கடைகள் வைத்திருப்பதாகவும், சில கடைகளில் சமூக இடை வெளி இல்லாமல் நின்று பொதுமக்கள் காய்கறிகள் வாங்கி செல்வதாகவும் மாநகராட்சி ஆணையாளர் கண்ணனுக்கு புகார் வந்தது.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி பகுதியில் அனுமதி இல்லாத இடத்தில் காய்கறி கடைகள் வைத்திருப்பதாகவும், சில கடைகளில் சமூக இடை வெளி இல்லாமல் நின்று பொதுமக்கள் காய்கறிகள் வாங்கி செல்வதாகவும் மாநகராட்சி ஆணையாளர் கண்ணனுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை நெல்லை டவுன் நயினார்குளம் மார்ககெட் பகுதியில் சோதனை செய்தனர். அதில் 2 காய்கறி கடைகளில் போக்குவரத்து இடையூறாகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நின்று கொண்டு இருந்தனர்.
அந்த கடைகளை உதவி வருவாய் ஆய்வாளர் தங்கபாண்டியன், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட குழுவினர் அடைத்தனர். மேலும் இதுபோன்று தொடர்ந்து செயல்பட்டால், அந்த கடைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story