கோவில் திருவிழாக்கள் ரத்து: மேடை ஏற முடியாமல் தவிக்கும் நாடக கலைஞர்கள்
கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மேடை ஏற முடியாமல் நாடக கலைஞர்கள் தவித்து வருகிறார்கள்.
வையம்பட்டி,
கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மேடை ஏற முடியாமல் நாடக கலைஞர்கள் தவித்து வருகிறார்கள்.
நாடக கலைஞர்கள்
ஆண்டுதோறும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெறும். இந்த காலங்களில் நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்துள்ள கோவில்பட்டியில் நாடக கலைஞர்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். கோவில் விழாக்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் நாடக கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் மேடை ஏற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
உதவியின்றி தவிப்பு
தென்னிந்திய நடிகர் சங்கம், நலவாரியம் உள்ளிட்ட எதிலும் உறுப்பினர்களாக இல்லாததால் கோவில்பட்டியில் உள்ள நாடக கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு இதுவரை எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை. இதனால், அவர்களது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது.
ஆகவே, தங்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், வருங்கால நலன்கருதி தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் மற்றும் நலவாரியத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story