பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க மேற்கொள்ளப்படும் பணிகளை வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில், பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க மேற்கொள்ளப்படும் பணிகளை வடக்கு மண்டல ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வருவோரை கண்காணிக்க பல்வேறு முன்னெற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தப் பணிகளை நேற்று வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர், கீழ்பென்னாத்தூர், மங்கலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளை பார்வையிட்டார். அப்போது அவருடன் வேலூர் மண்டல டி.ஐ.ஜி.காமினி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை அண்ணா நுழைவுவாயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை ஐ.ஜி. பார்வையிட்டார். அப்போது அங்கு, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஐ.ஜி.யுடன் ஆலோசனை நடத்தினார்.
பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் வழியாக வருபவர்களை தனிமைப்படுத்தப்படுவதற்காக திருவண்ணாமலையில் உள்ள ஒரு கல்லூரியில் தனிமைப்படுத்தும் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மையத்தை ஐ.ஜி. மற்றும் டி.ஐ.ஜி, கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை
அப்போது வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் கூறுகையில், பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு வந்தவர்கள் 14 நாட்கள் வீடுகளிலும் அல்லது மாவட்ட நிர்வாகம் மூலமாக ஏற்படுத்தப்பட்ட மையங்களிலும் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.

Related Tags :
Next Story