உடையார்பாளையம் பேரூராட்சி-தத்தனூர் ஊராட்சி பகுதிகளில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள்


உடையார்பாளையம் பேரூராட்சி-தத்தனூர் ஊராட்சி பகுதிகளில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள்
x
தினத்தந்தி 3 May 2020 6:46 AM GMT (Updated: 2020-05-03T12:16:09+05:30)

தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் 71 தூய்மை பணியாளர் களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

உடையார்பாளையம், 

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சி மற்றும் தத்தனூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் 71 தூய்மை பணியாளர் களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

இதற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். 

இதில் ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை, உடையார்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, தத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஐஸ்வர்யா தேவி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தத்த னூர் ஊராட்சி செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.


Next Story