கிருஷ்ணகிரியில் மாநில, மாவட்ட எல்லைகளில் கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரியில் மாநில, மாவட்ட எல்லைகளில் கலெக்டர் பிரபாகர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவலை தெரிவிக்கும் வகையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிறம் என மாவட்டம் வாரியாக மத்திய அரசு தினமும் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே தொடர்ந்து பச்சை நிறத்தில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வெளி மாநிலத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வருபவர்களை உரிய முறைப்படி விசாரணை நடத்திய பின்னரே மாவட்டத்திற்குள் போலீசார் அனுமதிக்கின்றனர்.
குறிப்பாக அதற்கான உரிமம் பெற்றவர்கள் மட்டுமே இந்த மாவட்டத்திற்குள் வரமுடியும் என்பதால் ஆங்காங்கே சோதனை செய்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பர்கூர் அருகே உள்ள ஒப்பதவாடி கூட்டு ரோடு பகுதிக்கு நேரில் சென்றார்.அந்த வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வந்த வாகனங்களை சோதனை செய்து மாவட்டத்திற்குள் வருவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story