பண்ருட்டியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
பண்ருட்டியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி,
பண்ருட்டி விழமங்கலத்தை சேர்ந்தவர் எல்லப்பன் மகன் பிரபாகரன்(வயது 27). இவர் நேற்று காலை பண்ருட்டி ராஜாஜி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர், திடீரென பிரபாகரனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ. 2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அவர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பண்ருட்டி துனை போலீஸ் சூப்பிரண்டு நாகராசன் தலைமையிலான தனிப்படையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் ஆகியோர் திருவதிகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் கண்காணிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.
வாலிபர் கைது
அப்போது அந்த வழியாக வந்த வாலிபர், போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அவரை போலீசார் துரத்தி சென்றனர். அப்போது, அவர் கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்த அவரை போலீசார் பிடித்து, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.
விசாரணயில், அந்த வாலிபர் திருவதிகையை சேர்ந்த முருகன் மகன் தேவா என்கிற தேவநாதன் (26 ) என்பதும், பிரபாகரனிடம் பணத்தை வழிப்பறி செய்து தப்பி சென்றவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தேவாவை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி, மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, ஆள் கடத்தல் என்று மொத்தம் 10 வழக்குகள் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story