பாஸ் வழங்குவதாக வெளியான தகவல்: போலீஸ் நிலையம் நோக்கி சென்ற 500-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் - ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு
பாஸ் வழங்குவதாக வெளியான தகவலையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையம் நோக்கி வடமாநிலத்தவர் கள் கும்பல், கும்பலாக சென்றனர். அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்,
கொரானா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மாம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை பகுதியில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழிற்சாலைகள் இயங் காததால் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பலர் உணவின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின் பேரில் வடமாநிலத்தவர்களுக்கு வருவாய்த்துறையினர் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்தனர்.
பாஸ் வழங்கப்படுவதாக...
இருப்பினும் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். ஊரடங்கு உத்தரவு நிலுவையில் உள்ளதால் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதில் சிக்கல் நிலவி வந்தது.
இந்த நிலையில் வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடியவர்களுக்காக ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் பாஸ் வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. இதை அறிந்து ஆங்காங்கே தங்கி இருந்த 500-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையம் நோக்கி கும்பல், கும்பலாக சென்றனர்.
திருப்பி அனுப்பினர்
தகவல் அறிந்த காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று ஆங்காங்கே வடமாநிலத்தவர்களை தடுத்து நிறுத்தினர். தற்போது பாஸ் எதுவும் வழங்கப்படவில்லை.
வதந்தியை நம்ப வேண்டாம். உங்களை சொந்த ஊருக்கு அனுப்ப அரசு தகுந்த ஏற்பாடு செய்யும். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story