கூட்டம் கூடுவதை தவிர்க்க கோவை ரங்கே கவுடர் வீதியில் கடைகள் அடைப்பு
மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் கோவை ரங்கே கவுடர் வீதியில் கடைகள் அனைத்து ம் அடைக்கப்பட்டன. இதனால் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கோவை,
கோவை ரங்கே கவுடர் வீதியில் மளிகை பொருட்களை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் கடைகள் உள்ளன. இதேபோல் டி.கே. மார்க்கெட் பகுதியிலும் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு சில்லறை வியாபாரிகள் மட்டும் இன்றி பொதுமக்களும் வந்து மளிகை பொருட்களை வாங்கி செல்கின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் தினமும் ஏராளமானோர் மளிகை பொருட்களை வாங்க இங்கு வருகின்றனர்.
போலீசார் பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இருப்பினும் சிலர் சமூக இடைவெளியை சரியாக கடைபிடிப்பது இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த பகுதியில் சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் மளிகை பொருட்களை வாங்க குவிந்தனர். இதையடுத்து பொதுமக்கள் குவிந்த அந்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வெறிச்சோடின
இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன் உக்கடம் மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்ததால் மீன் மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. கோவையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டிற்கு இருந்த போதிலும் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வரும் நூற்றுக்கணக்கான நபர்களில் ஒருவருக்கு இருந்தால் கூட மற்றவர்களுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவு பொதுமக்கள் மளிகை பொருட்கள் வாங்க குவிந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி நேற்று ஒருநாள் மட்டும் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று வியாபாரிகள் தாங்களாகவே முன் வந்து அறிவித்து இருந்தனர்.
இதன்படி நேற்று ரங்கே கவுடர் வீதி, டி.கே. மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. இதன்காரணமாக போக்குவரத்து நெருக்கடி மிகுந்த அந்தப்பகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள், கடைகள் மூடப்பட்டுள்ள தகவல் தெரியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இன்று (திங்கட்கிழமை) வழக்கம்போல் ரங்கே கவுடர் வீதியில் கடைகள் திறக்கப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story