சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 6 போலீசாருக்கு கொரோனா - நடிகர் சங்க ஓட்டுப்பெட்டிகளை காவல் காத்த போலீஸ்காரருக்கும் தொற்று
சென்னை போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 5 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நடிகர் சங்க தேர்தல் ஒட்டுப்பெட்டிகளை காவல் காத்த போலீஸ்காரருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
சென்னை,
சென்னை போலீசில் தினந்தோறும் கொரோனாவால் போலீசார் பாதித்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே 18 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 6 போலீசார் பாதிக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.
சேத்துப்பட்டு, கொத்தவால் சாவடி போக்குவரத்து போலீஸ்காரர்கள் 2 பேர், ஐ.சி.எப். போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், திருமங்கலம் உளவுப்பிரிவு போலீஸ்காரர், சூளைமேடு ரோந்து போலீஸ்காரர் ஆகியோர் கொரோனாவால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் குடும்பத்தினரும், சார்ந்தவர்களும் பரிசோதனை செய்யப்பட்டனர்.
நடிகர் சங்க தலைவர் தேர்தல் தொடர்பான வழக்கு கோர்ட்டு விசாரணையில் உள்ளது. இதனால் நடிகர் சங்க தேர்தல் ஓட்டுப்பெட்டிகள் சென்னை நுங்கம்பாக்கம் ஹாடாஸ் சாலையில் உள்ள வங்கி ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அந்த ஓட்டு பெட்டிகளை பாதுகாக்கும் காவல் பணியில் இருந்த போலீஸ்காரர் நேற்று முன்தினம் இரவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரும் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
Related Tags :
Next Story