திருவாரூர் மாவட்டத்தில் 10 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை மேலும் 4 பேர் டிஸ்சார்ஜ்

திருவாரூர் மாவட்டத்தில் 10 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை மேலும் 4 பேர் டிஸ்சார்ஜ்
x
தினத்தந்தி 3 May 2020 11:34 PM GMT (Updated: 2020-05-04T05:04:35+05:30)

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. மேலும் நேற்று 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. மேலும் நேற்று 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

6 பேருக்கு தொடர் சிகிச்சை

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 29 பேர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 19 பேர்் நோய் தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தநிலையில் நேற்று 4 பேர்் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் 6 பேர் மட்டுமே தொடர் சிகி்ச்சை பெற்று வருகின்றனர்.

ஆறுதல்

இதேபோல் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக புதிதாக கொரோனா நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. மேலும் நோய் தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணி்க்கை குறைந்து வருவதால் பொதுமக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

Next Story