பிரபல கன்னட எழுத்தாளர் நிசார் அகமது மரணம் - முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட தலைவர்கள் இரங்கல்


பிரபல கன்னட எழுத்தாளர் நிசார் அகமது மரணம் - முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 3 May 2020 11:35 PM GMT (Updated: 2020-05-04T05:05:57+05:30)

பிரபல கன்னட எழுத்தாளர் நிசார் அகமது மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்- மந்திரி எடியூரப்பா உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு, 

பிரபல கன்னட எழுத்தாளர் நிசார் அகமது. இவர் பெங்களூரு அருகே உள்ள தேவனஹள்ளியில் 1936-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி பிறந்தார். அவர் கர்நாடகத்தில் அரசு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 84 வயதாகும் அவர், வயோதிகம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மரணம் அடைந்தார்.

அவர், மனசு காந்தி பஜார், நினைத்தவரின் மனதில் உள்பட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். பல்வேறு கவிதைகளையும் எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளார். அவரது சிறந்த எழுத்து திறமைக்காக மத்திய அரசு கடந்த 2008-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது, கெம்பேகவுடா விருது, பம்ப விருது, ராஜ்யோத்சவா விருது, நாடோஜா விருது, அரசு விருது உள்பட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.

அவரது மறைவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், துணை முதல்-மந்திரிகள் லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண், முன்னாள் முதல்- மந்திரி குமாரசாமி, முன்னாள் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கன்னட இலக்கிய உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story