தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்
தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் மக்கள் வெளியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடியில் நேற்று காய்கறி மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. மக்கள் உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கி சென்றனர்.
கிருமிநாசினி தெளிப்பு
இதேபோன்று வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் லாரிகள் தூத்துக்குடிக்கு வந்து செல்வதால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. துறைமுக பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மக்கள் கூடும் இடங்களிலும் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இதுதவிர வெளியில் வரும் மக்கள் முககவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story