ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து தோப்பில் கச்சா எண்ணெய் வெளியேறியது பொதுமக்கள் பீதி


ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து தோப்பில் கச்சா எண்ணெய் வெளியேறியது பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 5 May 2020 4:01 AM IST (Updated: 5 May 2020 4:01 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து தோப்பில் கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

குடவாசல், 

குடவாசல் அருகே ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து தோப்பில் கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஒ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு

குடவாசல் அருகே உள்ள சிமிழியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் காப்பனாமங்கலத்தில் இருந்து செட்டி சிமிழிக்கு குழாய் மூலம் கியாஸ் எடுத்து செல்கிறது. குடவாசல் சிமிழியை சேர்ந்தவர் சங்கரன். இவருக்கு அதேபகுதியில் சொந்தமான தோப்பு உள்ளது. இந்த தோப்பில் மிளகாய், காய்கறி, மா, பலா ஆகியவைகளை அவர் சாகுபடி செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சங்கரனின் தோப்பு வழியாக செல்லும் ஓ.என்.ஜி.சி. குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. பின்னர் தோப்புகளில் கச்சா எண்ணெய் வெளியேறி தேங்கியது.

பொதுமக்கள் பீதி

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குடவாசல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து தாசில்தார் பரஞ்சோதி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, காப்பனாமங்கலத்தில் இருந்து செட்டி சிமிழி செல்லும் ஓ.என்.ஜி.சி. குழாய் லைனை நிறுத்தினர். பின்னர் பொறியாளர்களை கொண்டு தோப்பில் வெளியேறிய கச்சா எண்ணெய்யை சீரமைத்தனர்.

இந்தநிலையில் ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் தோப்பில் வெளியேறியதால் பாதிப்பு ஏற்படுமோ? என அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story