35 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர் - அதிகாரி தகவல்


35 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர் - அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 4 May 2020 11:03 PM GMT (Updated: 2020-05-05T04:33:28+05:30)

35 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என அதிகாரி கூறியுள்ளார்.

மும்பை, 

மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து மராட்டியத்தில் இருந்து ரெயில்கள் மற்றும் பஸ்கள் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் வெளிமாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தொழிலாளர்கள் குறித்து மாநில அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இதுவரை 35 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து உள்ளோம். எல்லா தொழிலாளர்களும் பயணம் செய்வதற்கு முன் மருத்துவ சோதனை செய்து கொள்ள வேண்டும். தொழிலாளர்களை அனுப்பி வைப்பது தொடர்பாக மற்ற மாநிலங்களுடன் தொடர்பில் உள்ளோம்.

கண்டறிவது கடினம்

தொழிலாளர்கள் ரெயிலில் பயணம் செய்வதற்கு முன் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அறிகுறி இல்லாதவர்களுக்கு கொரோனா உள்ளதா என்பது கண்டறிவது மிகவும் கடினம். ஆனால் மருத்துவ சோதனையை தவிர வேறு எதுவும் எங்களால் செய்ய முடியாது.

ராஜஸ்தான் தவிர மற்ற மாநிலங்கள் தனியார் வாகனங்களில் தொழிலாளர்கள் வருவதற்கு அனுமதி அளிக்க விருப்பம் இல்லாமல் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story