பிரதம மந்திரியின் நலிந்தோர் நலத்திட்டம் கிடைத்திட என்ன செய்ய வேண்டும்? மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விளக்கம்


பிரதம மந்திரியின் நலிந்தோர் நலத்திட்டம் கிடைத்திட என்ன செய்ய வேண்டும்? மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விளக்கம்
x
தினத்தந்தி 5 May 2020 10:12 AM IST (Updated: 5 May 2020 10:12 AM IST)
t-max-icont-min-icon

நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பிரதம மந்திரியின் நலிந்தோர் நலத்திட்டங்கள் கிடைத்திட என்ன செய்ய வேண்டும் என விளக்கப்பட்டுள்ளது.

திருச்சி, 

நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பிரதம மந்திரியின் நலிந்தோர் நலத்திட்டங்கள் கிடைத்திட என்ன செய்ய வேண்டும் என விளக்கப்பட்டுள்ளது.

திருச்சி மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் வான்லால் முயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பண நெருக்கடி

மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை அறிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களுடைய அன்றாட பணிகளை செய்யப் பல இடையூறுகளை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை தங்களிடம் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள நினைத்திருந்தாலும் சட்ட ரீதியாக தவணைத் தொகைகளை செலுத்துவதற்கு பண நெருக்கடிகள் ஏற்படுகிறது.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சட்டப்படி தாக்கல் செய்ய வேண்டிய மாதாந்திர படிவமான இ.சி.ஆர். தாக்கல் செய்வதில் ஒரு எளிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

நடைமுறை இரண்டாக பிரிப்பு

இதுவரையில் உள்ள நடைமுறைப்படி இ.சி.ஆர். (எலக்ட்ரானிக் கம் சலான் ரிட்டர்ன்) சமர்ப்பித்து அதற்கான பணத்தையும் உடனே செலுத்த வேண்டும். ஆனால் தற்போது அந்த நடைமுறையானது இரண்டாக பிரிக்கப்படுகிறது. முதலில் இ.சி.ஆர். பதிவேற்றம் செய்யலாம். பின்னர் பணத்தை அந்தந்த மாதத்திற்கான நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள்ளும் மேலும் நீட்டிக்கப்பட்ட தேதிக்குள்ளும் செலுத்தலாம்.

மேற்கண்ட மாற்றமானது நிறுவனத்திற்கும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஏதுவானதாக இருக்கும். இ.சி.ஆர். பதிவேற்றம் செய்வதென்பது, நிறுவனம் தமது வைப்பு நிதி சந்தாவை செலுத்துவதற்கான எண்ணத்தின் வெளிப்பாடாகும். அதன் அடிப்படையில் இ.சி.ஆர்-ஐ பதிவேற்றம் செய்து பின்னர் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள்ளும், மேலும் நீட்டிக்கப்பட்ட தேதிக்குள்ளும் பணத்தை செலுத்துவதாலும் பி.எம்.ஜி.கே.ஒய். காலங்களில் மேற்படி காரணத்தால் தாமதமாக செலுத்திய மாதாந்திர சந்தாவிற்கு தாமத கட்டணம் மற்றும் சட்டப்பூர்வ அபராதங்களில் இருந்து விடுபடலாம்.

நலத்திட்டங்கள்

இ.சி.ஆர்.-ஐ உரிய நேரத்திற்குள் சமர்ப்பிப்பதன் மூலம் பிரதம மந்திரியின் நலிந்தோர் நலத்திட்டத்தினால் கிடைக்கும் குறைந்த சம்பளம் பெரும் ஊழியருக்கு 24 சதவீத சந்தா(ஊழியருக்கு 12 சதவீதம், நிறுவனத்திற்கு 12 சதவீதம்) தொகை வரவு வைப்பதற்கான நிதியை நிர்ணயிக்கவும், அதனை செலுத்தவும் வசதியாக இருக்கும். இவ்வாறு செலுத்தப்படும் இ.சி.ஆர்-ன் அடிப்படையில் நோய் தொற்றின் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கும், வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கும் மேலும் பல நலத்திட்டங்களை வகுக்கவும் மற்றும் அரசினால் முடிவுகள் எடுக்கவும் ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story