அக்னி நட்சத்திரம் தொடக்கம்: பெரம்பலூர்-அரியலூரில் வெயில் கொளுத்தியது
அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. நேற்று பெரம்பலூர்- அரியலூரில் கடுமை யான வெயில் கொளுத்தி யது.
பெரம்பலூர்,
அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. நேற்று பெரம்பலூர்- அரியலூரில் கடுமை யான வெயில் கொளுத்தி யது.
அக்னி நட்சத்திரம்
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப் பட்டது. அப்போதே இந்த ஆண்டு கோடையில் வெயி லின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. பெரம்பலூர்- அரிய லூரில் கடந்த பல நாட்களா கவே 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் கொளுத்தியது. கோடை மழையும் பெய்யா மல், பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மக்களை ஏமாற்றி யது. கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு போய் பரிதாபமாக காட்சியளிக்கின் றன. மேலும் நிலத்தடி நீர் மட்டம் வெகு வாக குறைந்து வருவதால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படு கிற அபாயம் உள்ளது.
இந்த ஆண்டு “அக்னி நட்சத் திரம்” வெயிலின்போது வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் நேற்று தொடங்கி யது.
குடை பிடித்தபடியே...
கத்திரி வெயிலின் தொடக் கமே பயங்கரமாக இருந்தது. அந்த அளவிற்கு பெரம்பலூ ரில் காலை 10 மணியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெப்பத்தின் தன்மை மேலும் கூடியது. தற்போது கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி யுள்ளனர். ஆனாலும் அத்தி யாவசிய பொருட்கள் வாங்க வந்தோர் வெயிலின் கொடு மையை தாங்க முடியாமல் குடை பிடித்தபடியும், தலை யில் துணி போட்டுக்கொண் டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும் சென்றதை காணமுடிந்தது. பெரம்பலூ ரில் நேற்று கடுமையான வெயில் கொளுத்தியதோடு அனல்காற்றும் வீசியது. சாலைகளில் வெயிலின் தாக் கத்தினால் பல இடங்களில் கானல் நீர் தெரிந்தது. வருகிற 28-ந்தேதி வரை உள்ள அக்னி வெயிலை எதிர்கொள்ள மக்கள், கோடை மழை பொழி யுமா? என்று எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
Related Tags :
Next Story