ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து நெருக்கடி
ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் கடைவீதியில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் இரு, நான்கு சக்கர வாகனங்களில் ஒரே நேரத்தில் வந்து குவிந்தனர்.
ஜெயங்கொண்டம்,
ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் கடைவீதியில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் இரு, நான்கு சக்கர வாகனங்களில் ஒரே நேரத்தில் வந்து குவிந்தனர். இதனால் நான்கு ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பித்தது. போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்ய முடியாமல் போலீசார் திணறினர். மேலும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியும் பொதுமக்கள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக சென்று வந்தனர். மேலும் பொதுமக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பொருட்களை வாங்கி சென்றனர். ஜெயங்கொண்டத்தில் ஊரடங்கை மீறி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்த எலக்ட்ரிக்கல் கடை, நகை கடை மற்றும் ஜவுளி கடை உள்ளிட்ட கடைகளின் உரிமையாளர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story