ஆலங்குளம் பகுதியில் 102 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
ஆலங்குளம் பகுதியில் இதுவரை 102 பேரை சுகாதார துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
ஆலங்குளம்,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோர் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வெளி யூர்களில் இருந்து வருபவர் களை சுகாதார துறையினர் கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளான சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்ததாக, ஆலங்குளம், ஊத்துமலை, நல்லூர், குருவன்கோட்டை, குறிப்பன்குளம், ரெட்டியார்பட்டி, வீராணம், நெட்டூர், மாயமான்குறிச்சி ஆகிய ஊர்களை சேர்ந்த 102 பேரை இதுவரை சுகாதார துறையினர் கண்டறிந்து உள்ளனர்.
அவர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனை செய்து அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் ஊத்துமலை, நெட்டூர், ஆலங்குளம் சித்த மருத்துவமனை சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story