நீலகிரி மாவட்டத்தில் 5 கடைகளுக்கு ‘சீல்’
நீலகிரி மாவட்டத்தில் 5 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
கூடலூர்,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பிற கடைகள் திறப்பு தொடர்பாக சில தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன. அந்த தளர்வுகள் இன்று(புதன்கிழமை) முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் நேற்று முன்கூட்டியே கூடலூர் நகரில் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் 2 கடைகள் திறந்து இருப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு ஆர்.டி.ஓ. ராஜ்குமார், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், தாசில்தார் சங்கீதாராணி மற்றும் போலீசார் விசாரணை நடத்த சென்றனர்.
வாடிக்கையாளர்களை கடைகளுக்குள் வைத்து...
அப்போது அதிகாரிகளை கண்டதும், வாடிக்கையாளர்களை கடைகளுக்குள் வைத்து உரிமையாளர்கள் ஷட்டரை மூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பின்பக்க வாசல் வழியாக வாடிக்கையாளர்கள் வெளியே சென்றனர். பின்னர் உரிமையாளர்களை அழைத்து, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கூடலூரில் கடை வைத்து இருப்பதும், சோதனைச்சாவடி கண்காணிப்பை மீறி மலப்புரத்தில் இருந்து கூடலூருக்கு வந்து கடையை திறந்ததும் தெரியவந்தது.
உடனே அங்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையிலான மருத்துவ மற்றும் சுகாதார குழுவினர் வந்தனர். பின்னர் அவர்கள் கடைகளின் உரிமையாளர்களை தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
மேலும் கடைகளில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டது. இது தவிர ஊரடங்கை மீறியதாக அந்த கடைகளை பூட்டி, வருவாய்த்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
மருந்தகங்கள்
பின்னர் சின்ன பள்ளிவாசல் தெருவில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்ட ஒருவர், தனது இறைச்சி கடையை திறந்து இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு மருத்துவ மற்றும் சுகாதார குழுவினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களது உத்தரவின்பேரில் நகராட்சி ஊழியர்கள் அந்த கடைக்கு ‘சீல்’ வைத்தனர். மேலும் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டது.
இதேபோன்று கோத்தகிரிக்கு வந்த சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், பஸ் நிலைய பகுதியில் உள்ள 2 மருந்தகங்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நிற்பதை பார்த்தார். மேலும் அதற்கான ஏற்பாடுகளை உரிமையாளர்கள் செய்யாததும் தெரியவந்தது. உடனே அந்த மருந்தகங்களுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டார். அதன்படி அவை ‘சீல்’ வைக்கப்பட்டன.
மேலும் குன்னூர் அருகே ஓட்டுப்பட்டறையில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்யாததால், ஒரு காய்கறி கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Related Tags :
Next Story