காஷ்மீரில் 5 பாதுகாப்பு படையினர் கொலைக்கு பழிதீர்க்க பயங்கரவாதிகள் மீது சர்ஜிகல் தாக்குதல் நடத்த வேண்டும் - சிவசேனா சொல்கிறது
காஷ்மீரில் 5 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் விதமாக பயங்கரவாதிகள் மீது சர்ஜிகல் தாக்குதல் நடத்த வேண்டும் என சிவசேனா கூறுகிறது.
மும்பை,
ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குப்வாரா மாவட்டத்துக்குட்பட்ட ஹந்த்வோரா பகுதியில், பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 5 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர். பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது:-
மற்றொரு தாக்குதல்
5 பாதுகாப்பு படை வீரர்களின் உயிர் தியாகத்திற்கு பழிதீர்க்கும் விதமாக காலதாமதம் செய்யாமல் அவர்கள் மீது மற்றொரு சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்பட வேண்டும். இந்தியாவின் மண்ணில் புகுந்து இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்படுவது ஒரு நல்ல அறிகுறியாக தெரியவில்லை.
நமது ராணுவ வீரர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே கொல்லப்படுகிறார்கள். டெல்லியில் ஒரு வலுவான மற்றும் மிகவும் தேசபக்தி கொண்ட அரசு ஆட்சியில் இருக்கும் நேரத்தில் இது நடக்கிறது. இந்திய அரசு கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்த்து போராடும் அதே நேரத்தில், காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான போரில் இந்தியா காஷ்மீர் போரை மறந்துவிட்டது. ஆனால் பாகிஸ்தான் அப்படி செய்யவில்லை.
படுகொலைகள் தொடர்கிறது
கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்துப் போராடும் போலீசார், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வானத்திலிருந்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்ட அதே நேரத்தில் இந்த துயரம் நடந்தது இருப்பது கவனிக்கத்தக்கது. இந்த தியாகிகளின் குடும்பத்தினர் மீதும் யாராவது மலர் இதழ்களை பொழிய வேண்டும். நாட்டிற்காக இத்தகைய உயிர்த் தியாகம் செய்தவர்களில் ஒரு முஸ்லிம் ராணுவ வீரரும் உள்ளார். இந்து-முஸ்லிம் பிரிவினை அரசியலில் ஈடுபடுபவர்கள் இதனை மறந்துவிடக்கூடாது.
ஊரடங்கு காலத்திலும் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவும் வலுவான நோக்கங்களுடன் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தனர். ஆனால் இந்திய வீரர்களின் படுகொலைகள் இன்னும் அங்கே தொடர்கின்றன.
வீரமரணமடைந்த தியாகிகளுக்கு அஞ்சலி மட்டும் செலுத்தி கொண்டிருப்பதில் என்ன பயன்?. 5 வீரர்களின் மூவர்ணக்கொயை அளிக்கிறது. டி போற்றப்பட்ட உடல்களின் படம் நாட்டு மக்களுக்கு வேதனை
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story