கொரோனாவால் பாதிக்கப்பட்ட 43 பேர் குணமடைந்துள்ளனர் கலெக்டர் பிரவீன்நாயர் தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 43 பேர் குணமடைந்துள்ளதாக நாகை கலெக்டர் பிரவீன்நாயர் கூறி உள்ளார்.
நாகப்பட்டினம்,
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 43 பேர் குணமடைந்துள்ளதாக நாகை கலெக்டர் பிரவீன்நாயர் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரத்த மாதிரி பரிசோதனை
நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 2,597 பேரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. காசிக்கு சென்று திரும்பிய வேளாங்கண்ணியை சேர்ந்த ஒரு நபருக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அறிக்கை வந்துள்ளது.
நிலுவையில் முடிவுகள்
இந்த 2 நபர்களையும் சேர்த்து நாகை மாவட்டத்தில் இதுவரை 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 43 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
2,533 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 21 பேருக்கு பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story