பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கண்டறிய 2,500 பேருக்கு மருத்துவ பரிசோதனை


பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கண்டறிய 2,500 பேருக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 6 May 2020 11:24 AM IST (Updated: 6 May 2020 11:24 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய 2,500 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய 2,500 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டனர்

பெரம்பலூர் மாவட்டத்தில், சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்த தொழிலாளர்கள் உள்பட 37 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே கோயம்பேடு காய்கறி மார்க்கெட் பகுதியில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூலித்தொழிலாளர்கள் 90 பேர் உள்பட 230 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், திருமாந்துறை, பாடாலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2,500 பேருக்கு பரிசோதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே 300 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும் என்று சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் கீதாராணி தெரிவித்தார்.

Next Story