கோயம்பேட்டில் இருந்து பெரம்பலூர் வந்தவர்கள், தாமாக முன்வந்து பரிசோதித்து கொள்ள வேண்டுகோள்
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக பல்வேறு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக பல்வேறு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தீவிரம் கருதி அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களை பரிசோதித்து தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
எனவே பெரம்பலூர் மாவட்டத்திற்கு சமீபத்தில் கோயம்பேடு பகுதியில் இருந்து வந்தவர்கள், தாங்களாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து, தங்களது வருகையை பதிவு செய்து தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வதோடு, தங்களை தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு வந்தவர்கள் 1077 என்ற எண்ணுக்கோ அல்லது கிராம நிர்வாக அலுவலரிடமோ, ஊராட்சித் தலைவர், ஊராட்சி செயலாளர், தாசில்தார் ஆகியோரில் ஒருவரிடமோ தங்களது வருகையை பதிவு செய்வதோடு, மருத்துவ குழுவிற்கு தகவல் தெரிவித்து நோய் தொற்று சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு வருகை புரிந்தவர்கள் தங்களது வருகையை பதிவு செய்ய தவறும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story