நிவாரணம் வழங்க கோரி இசை கலைஞர்கள் நூதன போராட்டம்


நிவாரணம் வழங்க கோரி இசை கலைஞர்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 6 May 2020 12:24 PM IST (Updated: 6 May 2020 12:24 PM IST)
t-max-icont-min-icon

நிவாரணம் வழங்க கோரி இசை கலைஞர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரமங்கலம், 

நிவாரணம் வழங்க கோரி இசை கலைஞர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழ்வாதாரம் இழப்பு

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், திருமணம் மற்றும் சுபகாரியங்கள் உள்ளிட்டவை நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இசை கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அரசு, தங்களுக்கு அறிவித்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

போராட்டம்

இந்நிலையில் தங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி, கோவிந்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்த இசை கலைஞர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.இதையடுத்து அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் திரண்டனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து மேளம் வாசித்தும், நாதஸ்வரம் இசைத்தும், தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Next Story