ஜெயங்கொண்டத்தில் முக கவசம் அணியாத 119 பேரிடம் ரூ.12 ஆயிரம் அபராதம் வசூல்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, முக கவசம் அணியாமல் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும், முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் 100 ரூபாய் அபராதம்.
ஜெயங்கொண்டம்,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, முக கவசம் அணியாமல் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும், முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையர் அறச்செல்வி தெரிவித்திருந்தார்.
நேற்று முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படு கிறது. நேற்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை முக கவசம் அணியாமல் ஜெயங்கொண்டம் கடைவீதிக்கு சென்றவர்களை அதிகாரிகள் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தி, அவர் களுக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதித்தனர். இதன்படி மொத்தம் 119 பேருக்கு ரூ.11,900 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
இதேபோல் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் நகர பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமலும், அடையாள அட்டை இல்லாமலும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் 2 பேராக பயணம் செய்தவர்கள் என மொத்தம் 5 பேர் மீது வழக்குப்பதிந்து, வாகனங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story