மாவட்ட செய்திகள்

சாராய ஊறல் அழிப்பு; 2 பேர் கைது + "||" + Destruction of alcohol 2 arrested

சாராய ஊறல் அழிப்பு; 2 பேர் கைது

சாராய ஊறல் அழிப்பு; 2 பேர் கைது
சிவகிரி அருகே தனியாருக்கு சொந்தமான தோப்புகளில் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர்.


சிவகிரி, 

சிவகிரி அருகே தேவிப்பட்டினத்திற்கு மேற்கே உள்ள தனியாருக்கு சொந்தமான தோப்புகளில் சாராய ஊறல் வைத்திருப்பதாக சிவகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அங்கு சிவகிரி காமராஜ்நகர் கீழத்தெருவை சேர்ந்த முருகன் (வயது 55) என்பவர் தனது உறவினருக்கு சொந்தமான இடத்தில் உள்ள தோப்பில் சாராய ஊறல் போட்டிருப்பது தெரிந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த 2 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் போலீசார் சுப்பையாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கோழிப்பண்ணைக்கு பின்புறம் அதே ஊரைச் சேர்ந்த வீரையா மகன் தினேஷ் (வயது 35) என்பவர் சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் வைத்திருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 15 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. படப்பை அருகே, சாராயம் விற்பனை செய்த 2 பேர் கைது
படப்பை அருகே சாராயம் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. கல்வராயன்மலையில், 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - ‘டிரோன்’ மூலம் கண்டுபிடித்து போலீசார் நடவடிக்கை
கல்வராயன்மலையில் டிரோன் மூலம் 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டு பிடித்து அழித்தனர்.
3. தலை துண்டாகி இளம்பெண் பலி: கேரட் கழுவும் எந்திர உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
தலை துண்டாகி இளம்பெண் பலியான சம்பவம் தொடர்பாக கேரட் கழுவும் எந்திர உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. கல்வராயன்மலையில், 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - 40 மூட்டை வெல்லம் பறிமுதல்
கல்வராயன்மலையில் 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். மேலும் 40 மூட்டை வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.
5. வீட்டில் வைத்து சாராயம் விற்றவர் உள்பட 2 பேர் கைது - காரைக்காலில் போலீசார் அதிரடி
காரைக்காலில் வீட்டில் வைத்து சாராய பாக்கெட்டுகள் தயாரித்து விற்றவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.