டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: மொத்தமுள்ள 132 கடைகளில் 40 மட்டுமே இயங்கும்


டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: மொத்தமுள்ள 132 கடைகளில் 40 மட்டுமே இயங்கும்
x
தினத்தந்தி 7 May 2020 4:00 AM IST (Updated: 7 May 2020 3:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு உத்தரவுப்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை கள் இன்று முதல் திறக்கப்பட உள்ளது. மொத்தமுள்ள 132 கடைகளில் 40 மட்டுமே இயங்கும் என்றும், சென்னை உள் பட வெளிமாவட்டத்தினருக்கு மதுபானம் விற்பனை கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், 

கொரோனா பாதிப்பு காரணமாக தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர பிற இடங் களில் இன்று (வியாழக்கிழமை) முதல் மதுக்கடைகளைத் திறக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது.,

மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நடைமுறையில் உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளும் மூடப்பட்டது.

இந்நிலையில் அரசு தற்போது டாஸ்மாக் மதுக்கடைகளை தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள 132 அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் 26 கடைகள் சென்னை மண்டலத்தில் உள்ளதால், 106 கடைகளை மட்டும் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

40 கடைகள் இயங்கும்

அந்த 106 கடைகளில் 66 கடைகள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளதால் அந்த கடைகள் திறக்கப்பட மாட்டாது. மீதமுள்ள 40 கடைகள் மட்டுமே திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று திறக்கப்பட உள்ளது.

டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் மதுவை சிரமமின்றி வாங்க ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் டாஸ்மாக் அதிகாரிகளுடன் போலீசார் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கேற்றவாறு மதுபான கடைகளில் 3 முதல் 4 சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு அள வீடு செய்யப்பட்டுள்ளது.

வெளிமாவட்டத்தினருக்கு கிடையாது

மேலும் மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் 5 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

மேலும் மாவட்டம் முழுதும் 500-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதோடு மட்டுமில்லாமல் மதுவாங்க வருபவர்கள் கண்டிப்பாக ஏதேனும் புகைப்பட அடையாள அட்டையை கொண்டு வரவேண்டும் அவ்வாறு கொண்டு வந்தால் மட்டுமே அவர்களுக்கு மது வழங்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டம் தவிர, வெளிமாவட்ட மற்றும் சென்னை பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு கண்டிப்பாக மது வழங்கப்படமாட்டாது. எனவே மதுபிரியர்கள் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story