மாவட்ட செய்திகள்

அம்மா உணவகங்களில்உணவு வழங்க ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் காசோலைஅமைச்சர் காமராஜ் , கலெக்டரிடம் வழங்கினார் + "||" + At the Amma restaurants Check of Rs 1 lakh 83 thousand to feed

அம்மா உணவகங்களில்உணவு வழங்க ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் காசோலைஅமைச்சர் காமராஜ் , கலெக்டரிடம் வழங்கினார்

அம்மா உணவகங்களில்உணவு வழங்க ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் காசோலைஅமைச்சர் காமராஜ் , கலெக்டரிடம் வழங்கினார்
திருவாரூர் மாவட்டத்தில் 5 அம்மா உணவகங்களில் உணவு வழங்குவதற்காக ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் ஆனந்திடம் அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
கொரடாச்சேரி, 

திருவாரூர் மாவட்டத்தில் 5 அம்மா உணவகங்களில் உணவு வழங்குவதற்காக ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் ஆனந்திடம் அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

17-ந்தேதி வரை ஊரடங்கு

கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க தமிழகம் முழுவதும் வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஏழை-எளிய மக்களின் உணவு தேவையினை போக்கும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய 5 அம்மா உணவகங்களில் அ.தி.மு.க. சார்பில் விலையில்லா உணவு வழங்குவதற்காக கடந்த 3-ந்தேதி அமைச்சர் காமராஜ் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 300 வழங்கி இருந்தார்.

ஆய்வு

இந்த நிலையில் நேற்று திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் அம்மா உணவகத்தினை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். அப்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் வருகிற 17-ந்தேதி வரை 5 அம்மா உணவகங்களிலும் 3 வேளையும் ஏழைகளுக்கு விலையில்லாமல் உணவு வழங்குவதற்காக ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்து 400-க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் ஆனந்திடம் அமைச்சர் வழங்கினார்.