இன்று திறக்கப்படும் மதுக்கடைகளுக்கு மதுபாட்டில்களை எடுத்து செல்லும் பணி வேதாரண்யத்தில் நடந்தது

இன்று திறக்கப்படும் மதுக்கடைகளுக்கு மதுபாட்டில்களை எடுத்து செல்லும் பணி வேதாரண்யத்தில் நடந்தது
x
தினத்தந்தி 7 May 2020 5:49 AM IST (Updated: 7 May 2020 5:49 AM IST)
t-max-icont-min-icon

இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படும் மதுக்கடைகளுக்கு மதுபாட்டில்களை எடுத்துச்செல்லும் பணி வேதாரண்யத்தில் நடந்தது.

வேதாரண்யம், 

இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படும் மதுக்கடைகளுக்கு மதுபாட்டில்களை எடுத்துச்செல்லும் பணி வேதாரண்யத்தில் நடந்தது.

மதுக்கடைகள் திறப்பு

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வேதாரண்யம் தாலுகா பகுதியில் உள்ள 27 மதுக்கடைகள் மூடப்பட்டன.

இந்த கடைகளில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மதுக்கடைகளில் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள் லாரி மூலம் வேதாரண்யத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கடந்த 25 நாட்களுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வந்தது.

போலீஸ் பாதுகாப்பு

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அதன்படி நேற்று மண்டபத்தில் இருந்து மதுபாட்டில்கள் லாரியில் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடைகளுக்கு எடுத்து செல்லும் பணி நடந்தது.

Next Story