சரக்கு ரெயில் மூலம் கர்நாடகாவில் இருந்து நாகர்கோவிலுக்கு 3 ஆயிரம் டன் அரிசி வந்தது


சரக்கு ரெயில் மூலம் கர்நாடகாவில் இருந்து நாகர்கோவிலுக்கு 3 ஆயிரம் டன் அரிசி வந்தது
x
தினத்தந்தி 7 May 2020 1:18 AM GMT (Updated: 7 May 2020 1:18 AM GMT)

கர்நாடகாவில் இருந்து நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயில் மூலம் 3 ஆயிரம் டன் அரிசி வந்தது.

நாகர்கோவில், 

கர்நாடகாவில் இருந்து நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயில் மூலம் 3 ஆயிரம் டன் அரிசி வந்தது.

சரக்கு ரெயில் மூலம் அரிசி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு தொழில்களும் முடங்கி உள்ளன. எனவே தமிழகத்தில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

குமரி மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க, குமரி மாவட்ட பொது வினியோக திட்டத்துக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து டன் கணக்கில் அரிசி கொண்டு வரப்பட்டது. கடந்த 1 மாதத்தில் இதுவரை 3 தடவை குமரிக்கு அரிசி வந்தது. பின்னர் அவை பள்ளிவிளையில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

3 ஆயிரம் டன்

இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து 3 ஆயிரம் டன் புழுங்கல் அரிசி நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவை சரக்கு ரெயில் மூலம் நேற்று காலை நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

பின்னர் அவற்றை லாரிகளில் ஏற்றி பள்ளிவிளை மத்திய அரசு குடோனுக்கு கொண்டு செல்லும் பணி நடந்தது. இதற்காக ரெயில் நிலைய சாலையில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

Next Story