நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகள் திறப்பு சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) டாஸ் மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.
நெல்லை,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) டாஸ் மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி, கடைகள் முன்பு தடுப்பு கட்டைகள் அமைத்து சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
டாஸ்மாக் கடைகள் திறப்பு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அன்றில் இருந்து மதுபிரியர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். அரசு ஊரடங்கு உத்தரவை படிப்படியாக தளர்த்தி வருகிறது. கடந்த 4-ந் தேதி முதல் ஊரகப்பகுதியில் தொழில் நிறுவனங்கள், நகரப்பகுதியில் உள்ள சில கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சவுக்கு கட்டையால் தடுப்புகள்
நெல்லை மாவட்டத்தில் 96 டாஸ்மாக் கடைகளும், தென்காசி மாவட்டத்தில் 69 டாஸ்மாக் கடைகளும் என மொத்தம் 165 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மேலப்பாளையம், புளியங்குடி, சிவகிரி உள்ளிட்ட கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள கடைகளை தவிர மற்ற கடைகள் திறக்கப்படுகின்றன. மேற்கண்ட கடைகளுக்கு முன்பு சவுக்கு கட்டையால் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 6 அடி இடைவெளியில் வட்டம் போடப்பட்டு உள்ளது. இந்த வட்டத்துக்குகள் நின்று மதுபிரியர்கள் பாட்டில்களை வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கடை நுழைவுவாயில் முன்பு கைகழுவ சோப்பு ஆயில் வழங்கப்படுகிறது. இன்று திறக்கப்பட உள்ள கடைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. பார்க்கு அனுமதி வழங்கப்படவில்லை. குடோனில் வைக்கப்பட்டு இருக்கும் மதுபாட்டில்கள் இன்று ஒவ்வொரு கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது.
முககவசம்
மதுபிரியர்கள் முககவசம் அணிந்து வருவதை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஒரு கடைக்கு 50 பேர் மட்டும் நிற்கும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் முககவசம், கையுறை அணிந்து வியாபாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
இதேபோல், விக்கிரமசிங்கபுரம், தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட இரு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைபிடிப் பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story