மாவட்ட செய்திகள்

கொரோனாவை மறந்துதிருச்சியில் சுதந்திர பறவைகளாக மாறிவிட்ட பொதுமக்கள் + "||" + Forget Corona Civilians who have become independent birds in Trichy

கொரோனாவை மறந்துதிருச்சியில் சுதந்திர பறவைகளாக மாறிவிட்ட பொதுமக்கள்

கொரோனாவை மறந்துதிருச்சியில் சுதந்திர பறவைகளாக மாறிவிட்ட பொதுமக்கள்
திருச்சியில் கொரோனாவை மறந்துவிட்டதுபோல் பொதுமக்கள் ஊரடங்கு சமயத்தில் சுதந்திர பறவைகள்போல் வாகனங்களில் உலா வருகின்றனர்.
திருச்சி, 

திருச்சியில் கொரோனாவை மறந்துவிட்டதுபோல் பொதுமக்கள் ஊரடங்கு சமயத்தில் சுதந்திர பறவைகள்போல் வாகனங்களில் உலா வருகின்றனர்.

ஊரடங்கு தளர்வு

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்ததன் காரணமாக சிவப்பு மண்டலத்தில் இருந்த திருச்சி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது. இதனால் திருச்சியில் ஊரடங்கில் இருந்து சிறிது தளர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் எதி ரொலியாக 3-வது நாளாக நேற்று திருச்சியில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. மக்கள் கூட்டம், கூட்டமாக சென்று பொருட்களை வாங்கி சென்றனர்.

காந்திமார்க்கெட்டை சுற்றியுள்ள பெரிய கடைவீதி, மரக்கடை, கம்மாளத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் மோட்டார் சைக்கிளிலும், நடந்தும் சென்றதை பார்க்க முடிந்தது. ஆனால் இவர்களில் 50 சதவீதம் பேர் முககவசம் அணியவில்லை. சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. காந்திமார்க்கெட் பகுதியில் எண்ணெய் கடைகள், மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

போக்குவரத்து நெரிசல்

கொரோனாவில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருப்பது பெரும் விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் எதிரொலியாக திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் மூடப்பட்டு இருந்த மேம் பாலங்கள் திறக்கப்பட்டு விட்டன. தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் தடுப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. இதனால் வாகன ஓட்டிகள் சுதந்திர பறவைகள்போல் சமூக இடைவெளி துளியும் இன்றி நாலாபுறமும் வலம் வருகிறார்கள். இதனால் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் மதியம் வரை போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்ததை காண முடிந்தது. இதற்கிடையே விதிகளை மீறி முககவசம் அணியாமல் வாகனங்களில் வலம் வந்தவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர்.