மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில்1½ வயது குழந்தை உள்பட 3 பேருக்கு கொரோனா + "||" + In the Perambalur district Corona for 3 people including a 1½ year old baby

பெரம்பலூர் மாவட்டத்தில்1½ வயது குழந்தை உள்பட 3 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில்1½ வயது குழந்தை உள்பட 3 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் 1½ வயது குழந்தை உள்பட 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் 1½ வயது குழந்தை உள்பட 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மொத்தம் 37 பேரில், 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மீதமுள்ள 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சாத்தனூரை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், வேப்பூர் பகுதியை சேர்ந்த 35 வயது பெண், நல்லறிக்கையை சேர்ந்த 1½ வயது ஆண் குழந்தை என மொத்தம் 3 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 3 பேரின் குடும்பத்தினர், அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களின் சளி, ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும் சாத்தனூர், வேப்பூர், நல்லறிக்கை ஆகிய கிராம பகுதிகளில் முக்கிய சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

40 பேர் பாதிப்பு

அப்பகுதியில் சுகாதாரத்துறையினரால் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்களும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.