மாவட்ட செய்திகள்

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா ரத்து: பொதுமக்கள் ஆலயத்துக்கு வர அனுமதி இல்லை - கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு + "||" + Panchalangurichi Weerasakadevi Temple festival canceledNo public is allowed to come to the temple Collector Sandeep Nanduri announces

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா ரத்து: பொதுமக்கள் ஆலயத்துக்கு வர அனுமதி இல்லை - கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா ரத்து: பொதுமக்கள் ஆலயத்துக்கு வர அனுமதி இல்லை - கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா ரத்து செய்யப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் ஆலயத்துக்கு வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி, 

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவை வருகிற 17-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து உள்ளது.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் நலன் கருதியும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும் பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அனுமதி இல்லை

எனவே இன்று (வெள்ளிக்கிழமை) பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா நடத்துவதற்கு அனுமதி இல்லை. அன்றைய தினம் தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகை தருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இணையதளத்தில் பதிவு செய்த வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
இணையதளத்தில் பதிவு செய்துள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
2. வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை மாவட்ட எல்லையில் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை மாவட்ட எல்லையில் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
3. தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 3 மண்டலங்களில் இன்று கட்டுப்பாடுகள் தளர்வு - கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 3 மண்டலங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
4. தூய்மை பணிபுரிவோர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரணத்தொகை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பணிபுரிவோர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
5. கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் 18 பேரும் நல்ல நிலையில் உள்ளனர் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 18 பேரும் நல்ல நிலையில் உள்ளனர் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-