ஆலங்குளத்தில் 2-வது நாளாக முழு ஊரடங்கு


ஆலங்குளத்தில் 2-வது நாளாக முழு ஊரடங்கு
x
தினத்தந்தி 8 May 2020 4:15 AM IST (Updated: 8 May 2020 12:40 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் நேற்று 2-வது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

ஆலங்குளம், 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று முன்தினம் முதல் 2 நாட்கள் முழுஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று 2-வது நாளாக ஊரடங்கு நடந்தது.

தென்காசி-நெல்லை ரோடு, அம்பை ரோட்டில் உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள் மட்டும் வழக்கம் போல் இயங்கின. விவசாயிகள் நலன் கருதி காய்கறி மார்க்கெட்டும் செயல்பட்டது.

டாஸ்மாக் கடைகள்

நேற்று டாஸ்மாக் கடைகள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டன. முழுஊரடங்கு காரணமாக, ஆலங்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படவில்லை. அந்த கடைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story