நன்னிலத்தில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பெட்டிகள் அமைச்சர் காமராஜ் வீடு,வீடாக சென்று வழங்கினார்


நன்னிலத்தில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பெட்டிகள் அமைச்சர் காமராஜ் வீடு,வீடாக சென்று வழங்கினார்
x
தினத்தந்தி 8 May 2020 12:04 AM GMT (Updated: 2020-05-08T05:34:17+05:30)

நன்னிலத்தில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பெட்டிகளை அமைச்சர் காமராஜ் வீடு,வீடாக சென்று வழங்கினார்.

நன்னிலம், 

நன்னிலத்தில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பெட்டிகளை அமைச்சர் காமராஜ் வீடு,வீடாக சென்று வழங்கினார்.

தொகுப்பு பெட்டி

திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் 1.25 லட்சம் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பெட்டி வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் வாகனங்கள் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வீடுகளுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான வினியோக வாகனங்களை நன்னிலம் பஸ் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

மளிகை பொருட்கள்

கொரோனா நோய் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமத்துக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அ.தி.மு.க. சார்பில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அரிசி, காய்கறி மற்றும் முக கவசம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்களில் உள்ள 5 அம்மா உணவகங்களிலும் அ.தி.மு.க. சார்பில் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இதற்கான முழு தொகை ரூ.2 லட்சத்து 53 ஆயிரத்து 700-ஐ அ.தி.மு.க. சார்பில் மாவட்ட கலெக்டரிடம் 2 கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரிந்த தூய்மை காவலர்களுக்கு சீருடை, சுகாதாரப்பொருட்கள் மற்றும் அரிசி, காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது.

வீடுகளுக்கு நேரடி வினியோகம்

இந்தநிலையில் ஊரடங்கு தொடரப்பட்டு உள்ளதால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் 1 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு மளிகை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பெட்டி வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் வாகனங்கள் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வீடுகளுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நன்னிலத்தில் வீடு,வீடாக சென்று இந்த தொகுப்பு பெட்டிகளை அமைச்சர் காமராஜ் நேரிடையாக சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. கோபால், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குணசேகரன், அன்பழகன், நன்னிலம் ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குடவாசல்

இதேபோல் குடவாசல் ஒன்றியத்தில் குடவாசல் பேரூராட்சி மற்றும் விஷ்ணுபுரம், மணப்பறவை ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவால் கஷ்டப்படும் மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் காமராஜ் வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், ராஜேந்திரன், நகர செயலாளர் சுவாமிநாதன், ஒன்றியக்குழு தலைவர் கிளாராசெந்தில், ஒன்றியக்குழு துணை தலைவர் தென்கோவன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அரசன்கோவன், ஊராட்சி தலைவர்கள், ஒன்றியகுழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story