கல்லல் வாரச்சந்தையில் கண்டுகொள்ளப்படாத சமூக இடைவெளி
கல்லலில் நடந்த வாரச்சந்தையில் மக்கள் சமூக இடைவெளியை கண்டுகொள்ளாமல்,முககவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக காய்கறி வாங்கி சென்றனர்.
கல்லல்,
கல்லலில் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். இந்த பகுதியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம். ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்காலிகமாக தெப்பக்குளம் அருகே சந்தை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு மக்கள் சமூக இடைவெளியை கண்டுகொள்ளாமல்,முககவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக காய்கறி வாங்கி சென்றனர்.
சந்தையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காய்கறிகள் வாங்க கூடியிருந்தனர். ஆனால் இவர்களை கட்டுப்படுத்தவோ, எச்சரிக்கை செய்யவோ ஒரு போலீசார் கூட அங்கு இல்லை.இதே நேரத்தில் அருகில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசார் மதுக்கடைக்கு பாதுகாப்பு அளித்ததை கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.
Related Tags :
Next Story