மாவட்ட செய்திகள்

பந்தலூர் அருகே பயங்கரம்: குடிபோதையில் தகராறு; தொழிலாளி அடித்து கொலை + "||" + Terror near Bandalur: Drunken dispute; Worker beat and killed

பந்தலூர் அருகே பயங்கரம்: குடிபோதையில் தகராறு; தொழிலாளி அடித்து கொலை

பந்தலூர் அருகே பயங்கரம்: குடிபோதையில் தகராறு; தொழிலாளி அடித்து கொலை
பந்தலூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.
பந்தலூர்,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள எருமாடு திருமங்கலம் ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் பாபு (வயது 38) மற்றும் பேபி. இவர்கள் 2 பேரும் நேற்று அந்தப்பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் 2 பேரும் மதுவாங்கி குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென 2 பேருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனை கவனித்த அதேப்பகுதியை சேர்ந்த விஜயன் (40) என்ற தொழிலாளி அங்கு வந்து, சண்டைபோட்ட 2 பேரையும் சமாதானப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பிரபு கீழே கிடந்த கட்டையை எடுத்து, விஜயன் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த விஜயன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து எருமாடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அடித்து கொலை செய்யப்பட்ட விஜயனின் உடலை கைப்பற்றி பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் தலைமறைவான பாபுவை போலீசார் சுற்றி வளைத்தனர். அவருக்கு காயம் இருந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கடலூர் அருகே, தேர்தல் முன்விரோத தகராறில் தொழிலாளி அடித்து கொலை
கடலூர் அருகே தேர்தல் முன்விரோத தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.