சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் போலீசார் தடியடி-மதுப்பிரியர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி செம்பொட்டல், கேசராபட்டி சாலை, நகரப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை நடைபெற்றது.
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி செம்பொட்டல், கேசராபட்டி சாலை, நகரப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் விற்பனை நடைபெற்றது. மதுப் பிரியர்கள் சமூகஇடை வெளியை கடைபிடித்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் நகரப்பட்டியில் உள்ள டாஸ்மாக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. அப்போது, மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் முண்டியடித்துக்கொண்டு மதுபாட்டில்களை வாங்கினர்.
போலீசார் அறிவுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை. இதனையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில் சடையம்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும் அதை பொருட் படுத்தாமல் அவர் மது வாங்கி சென்றார். அதன்பிறகு அங்கு சமூக இடைவெளியுடன் நின்று ஏராளமானோர் மது வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story