கருப்பு சின்னம் அணிந்து தி.மு.க.-கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கருப்பு சின்னம் அணிந்து தி.மு.க.வினர் மற்றும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
கருப்பு சின்னம் அணிந்து தி.மு.க.வினர் மற்றும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அலட்சியமாகவும், மதுக்கடைகளை திறப்பதில் ஆர்வமாகவும் அ.தி.மு.க. இருப்பதாக கூறி தமிழகம் முழுவதும்நேற்று தி.மு.க.வினர் கருப்பு சின்னம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் கட்சியினர் கருப்பு சின்னம் அணிந்து புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள தி.மு.க அலுவலகம் முன்பு சமூக இடைவெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி
அறந்தாங்கியில் தி.மு.க.வினர் கருப்பு சின்னம் அணிந்தும் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அன்னவாசல் நகர கிளையின் சார்பில் தமிழக அரசு டாஸ்மாக் மதுபான கடையை திறப்பதை கண்டித்தும், கொரோனா பாதிப்பு நீங்கும் வரை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வலியுறுத்தியும் கட்சி நிர்வாகிகள் அவரவர் இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் அன்னவாசல் நகர தி.மு.க. செயலாளர் அக்பர் அலி தலைமையில் அன்னவாசலில் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொன்னமராவதி
பொன்னமராவதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னமராவதி நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் அழகப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் பழனியப்பன் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினார். அதேபோல் கொப்பனாபட்டி தி.மு.க. கிளை செயலாளர் சீமாட்டி அப்துல் லத்தீப் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
விராலிமலை
விராலிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பகுதிகளிலும் ஒன்றியச்செயலாளர் சத்தியசீலன் தலைமையில் சமூக இடைவெளியுடன் கருப்புசட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீரனூர்
கீரனூரில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் வீட்டு முன்பு மாவட்ட பிரதிநிதி அசரப்அலி, நகர செயலாளர் அண்ணாதுரை மற்றும் கட்சியினர் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story