ஆம்பூர் தாலுகாவில், 2 டாஸ்மாக் கடைகளில் ரூ.13 லட்சத்துக்கு மது விற்பனை


ஆம்பூர் தாலுகாவில், 2 டாஸ்மாக் கடைகளில் ரூ.13 லட்சத்துக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 7 May 2020 10:30 PM GMT (Updated: 2020-05-08T22:43:11+05:30)

ஆம்பூர் தாலுகாவில் 2 டாஸ்மாக் கடைகளில் ரூ.13 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டது.

ஆம்பூர், 

ஆம்பூரை அடுத்த வடகரையில் உள்ள டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட்டது. அதையொட்டி டாஸ்மாக் கடைக்கு செல்லும் மேல்சான்றோர்குப்பம் சாலையின் தொடக்கத்தில் போலீசார் தடுப்பு அமைத்து, ஆதார் கார்டு வைத்திருந்தவர்களை மட்டுமே அந்தச் சாலையில் அனுமதித்தனர். அங்கு, 2 கிலோ மீட்டர் தூரம் வரை குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

கடைக்கு அருகில் உள்ள மண்டபத்தில் அமர வைக்கப்பட்டவர்களுக்கு டோக்கன் கொடுத்து டாஸ்மாக் கடைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அனைவரும் அமைதியாக நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், தன்னார்வலர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த டாஸ்மாக் கடையில் மட்டும் ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 630-க்கு மது விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் மாதனூரில் உள்ள டாஸ்மாக் கடையிலும் குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர். அங்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாதனூர் டாஸ்மாக் கடையில் ரூ.7 லட்சத்து 29 ஆயிரத்து 150-க்கு மது விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story