புளியங்குடியை சேர்ந்த சிறுநீரகம், இருதய நோயாளிகளுக்கு இ-பாஸ் வழங்க கோரிக்கை
புளியங்குடியை சேர்ந்த சிறுநீரகம், இருதய நோயாளிகளுக்கு இ-பாஸ் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
புளியங்குடி,
புளியங்குடியில் கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக சிறுநீரக நோயாளிகள், இருதய நோயாளிகள் மற்றும் பல்வேறு தரப்பட்ட நோயாளிகள் சிரமப்பட்டு வந்தனர்.
நெல்லை, தென்காசி மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட நகரங்களில் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சை எடுத்து வரக்கூடிய நோயாளிகளுக்கு அரசு வழங்கக்கூடிய இ-பாஸ் புளியங்குடி மக்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக சிறுநீரக நோயாளிகள், இருதய நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை தலைவர் அப்துர் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் தமிம் அன்சாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மணி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் அப்துல் வகாப், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நகர தலைவர் செய்யது உள்ளிட்ட கட்சியினர் நகரசபை அலுவலக அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர்.
இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார் சிங், தாசில்தார் அழகப்பா ராஜா ஆகியோர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story