மாவட்ட செய்திகள்

உத்திரமேரூர் அருகே, தொழிலாளி அடித்துக்கொலை - 4 பேர் கைது + "||" + Near Utremaruur Worker Struck and killed 4 arrested

உத்திரமேரூர் அருகே, தொழிலாளி அடித்துக்கொலை - 4 பேர் கைது

உத்திரமேரூர் அருகே, தொழிலாளி அடித்துக்கொலை - 4 பேர் கைது
உத்திரமேரூர் அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வர் (வயது 50). கூலித்தொழிலாளி. இவரது பேத்தி சோனியா (14). இவர் நேற்று முன்தினம் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சின்ராசு (24), செல்வராஜ் (60), மன்னன் (22), சக்திவேல் (19) ஆகியோர் சோனியாவிடம் தகராறு செய்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுவது. இதுகுறித்து சோனியா தனது தாத்தா புவனேஸ்வரிடம் கூறி அழுதார்.

இதையடுத்து புவனேஸ்வர் தனது உறவினர்கள் சுப்பிரமணி, உமாதாஸ், விக்னேஷ் ஆகியோருடன் சென்று தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சின்ராசு உள்பட 4 பேரும் புவனேஸ்வர் மற்றும் அவருடன் வந்தவர்களை உருட்டுக்கட்டைகளால் தாக்கினர்.

இதில் புவனேஸ்வர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த மற்ற 3 பேரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்தரவின்பேரில் பெருநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புவனேஸ்வர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும், சின்ராசு, செல்வராஜ், மன்னன், சக்திவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆத்தூர் அருகே பயங்கரம்: தொழிலாளி சரமாரி குத்திக்கொலை - 2 பேருக்கு கத்திக்குத்து; 12 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
ஆத்தூர் அருகே கட்டிட தொழிலாளி கத்தியால் சரமாரி குத்திக் கொலை செய்யப்பட்டார். மேலும் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 12 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. உத்திரமேரூர் அருகே, கள்ளக்காதலில் பிறந்த குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண் - குழந்தை உயிரிழந்தது
உத்திரமேரூர் அருகே, கள்ளக்காதலில் பிறந்த குழந்தையுடன் பெண் கிணற்றில் குதித்தார்.
3. உத்திரமேரூர் அருகே, மனைவியின் கள்ளக்காதலன் அடித்து கொலை - 2 பேர் கைது
உத்திரமேரூர் அருகே மனைவியின் கள்ளக் காதலன் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. உத்திரமேரூர் அருகே, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
உத்திரமேரூர் அருகே அரும்புலியூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5. உத்திரமேரூரில் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து
உத்திரமேரூரில் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து எற்பட்டது.