கொரோனா பாதிப்பு குறித்து மத்திய குழுவுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை
கொரோனா பாதிப்பு குறித்து மத்திய குழுவினருடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.
மும்பை,
மராட்டியத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில்தான் நோய்த் தொற்றுக்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மத்திய அரசு குழுவுடன் நோய் பாதிப்பு குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தியதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
வசதிகளை மேலும் அதிகரிக்க...
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது அந்தக் குழுவும் அதிகமானவர்களை தனிமைப்படுத்த பரிந்துரைத்ததாக அவர் தெரிவித்தார்.இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், ‘‘இப்போது உள்ள தனிமைப்படுத்தும் வசதிகளை மேலும் அதிகரிக்க நாங்கள் மும்பை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளோம்.
மாநிலத்தில் தற்போது 64 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தினந்தோறும் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார்.
Related Tags :
Next Story