கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.16 கோடிக்கு மது விற்பனை ; 2-வது நாளாக மதுவாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்


கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.16 கோடிக்கு மது விற்பனை ; 2-வது நாளாக மதுவாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
x
தினத்தந்தி 8 May 2020 10:15 PM GMT (Updated: 9 May 2020 2:52 AM GMT)

கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.16 கோடிக்கு மது விற்பனை நடந்து உள்ளது. நேற்று 2-வது நாளாக மது வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கோவை,

கோவை மாவட்டத்தில் மொத்தம் 295 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு என்று பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் கடைகளை தவிர மற்றப்பகுதிகளில் உள்ள 206 டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன.

கடைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், சமூக இடைவெளியை விட்டு நிற்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனை கள் விதிக்கப்பட்டு இருந்தது. காலையில் கடைகள் திறப் பதற்கு முன்பாகவே மதுபான பிரியர்கள் நீண்ட வரிசையில் அங்கு காத்து நின்றனர்.

பின்னர் அவர்கள் கடை திறந்ததும் தங்களுக்கு பிடித்த மதுபான வகைகளை வாங்கிச் சென்றனர். ஊரடங்கு உத்தர வுக்கு பின்னர் மூடப்பட்ட டாஸ்மாக் கடை, நீண்ட நாளுக்கு பின்னர் திறக்கப் பட்டதால், விற்பனை அதிகமாக இருந்தது. சராசரி யாக கோவை மாவட்டத்தில் உள்ள 295 டாஸ்மாக் கடைகளில் ரூ.7 கோடி வரை விற்பனையாகும். ஆனால் நேற்று முன்தினம் ஒரு நாளில் 206 கடைகள் மூலம் ரூ.16 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து நேற்று 2-வது நாளாகவும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்றும் மதுபான பிரியர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியைவிட்டு நின்று வாங்கிச்சென்ற னர். சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என்ப தற்காக சிலர் குடையு டனும் வந்திருந்தனர். இந்த நிலையில் கோவை காந்திபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைவாக காணப்பட் டது.

இது குறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள 206 டாஸ்மாக் கடை களில் நேற்று முன்தினம் ஒருநாளில் மட்டும் 19 ஆயிரத்து 936 பெட்டி மதுபான வகைகளும், 4 ஆயிரத்து 384 பெட்டி பீர் வகைகளும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ரூ.16 கோடியே 40 லட்சத்து 32 ஆயிரத்து 915க்கு மதுபானங் கள் விற்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைக ளிலும் போதிய அளவுக்கு மதுபான வகைகள் இருப்பு உள்ளது. நேற்று 2-வது நாளாகவும் மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. கோர்ட்டு அறிவித்து உள்ள நிபந்தனைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

டோக்கன் கொடுக்கப்பட்டு அதன் பின்னரே மதுபானங்கள் வழங்கப்படுகிறது. ஆதார் கார்டு காட்டவில்லை என்றால் மதுபானங்கள் கொடுக்கப்படவில்லை. கடை வளாகத்துக்குள் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் அனுமதிக் கப்படுகிறார்கள். அவர்கள் மதுபானங்கள் வாங்கிச்சென்ற பின்னர்தான் மற்ற நபர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

சமூக இடைவெளி பின்பற் றாத நபருக்கு கண்டிப்பாக மதுபானங்கள் வழங்கப்பட மாட்டாது. எனவே டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள்

அனைவரும் விதிகளை பின்பற்ற வேண்டும். அது போன்று பார்கள் திறக்க அனுமதி இல்லை. அனுமதியை மீறி சட்டவிரோதமாக பார் கள் திறக்கப்பட்டு செயல்பட் டால் சீல் வைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story