மாவட்ட செய்திகள்

வெளியூர்களுக்கு சென்று நீலகிரி திரும்பிய 1,190 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல் + "||" + Go to the returning overseas Nilgiris Monitoring 1,190 people

வெளியூர்களுக்கு சென்று நீலகிரி திரும்பிய 1,190 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்

வெளியூர்களுக்கு சென்று நீலகிரி திரும்பிய 1,190 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல்
வெளியூர்களுக்கு சென்று நீலகிரி திரும்பிய 1,190 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
ஊட்டி,

சென்னை கோயம்பேடு சென்று வந்த லாரி டிரைவர்கள், கிளனர்கள் 45 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை செய்ததில், 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. நஞ்சநாடு கீழ் கோழிக்கரை, கக்கன்ஜி காலனி, சேலாஸ் நேருநகர் ஆகிய 3 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அப்பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிகள், நீரிழிவு நோயாளிகள், சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

உங்களால் தான் தொற்று பரவுகிறது என்று யார் மீதும் பழி சொல்லக்கூடாது. இதை அனுமதிக்க முடியாது. வைரஸ் யாருக்கு வேண்டுமானாலும் பரவலாம். அவர்கள் நமக்காக இங்கிருந்து காய்கறிகளை கொண்டு சென்று, அங்கிருந்து காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்தார்கள். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு 9 பேர் குணமடைந்து திரும்பினர். அவர்கள் வசித்து வந்த ஊட்டி காந்தல், குன்னூர் ராஜாஜி நகர், கோத்தகிரி கடைவீதி, எஸ்.கைகாட்டி ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் 28 நாட்கள் கண்காணிப்பு இன்றுடன்(அதாவது நேற்று) முடிவடைகிறது.

அந்த பகுதிகள் சீல் அகற்றப்பட்டு நாளை(அதாவது இன்று) முதல் விடுவிக்கப்படுகிறது. அப்பகுதி மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பகுதிகளில் 2 அல்லது 3 நாட்களில் மதுக்கடைகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த டிரைவர்கள், கிளனர்கள் என 238 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் முடிவுகள் வர வேண்டி உள்ளது. கொரோனா பாதிப்பால் 2 நாட்கள் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படாமல் நிறுத்தப்பட்டது.

பரிசோதனை செய்யப்பட்ட நபர்களுக்கு பாதிப்பு இல்லை என்று தெரியவந்ததும் தொடர்ந்து அவர்கள் சரக்கு வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுகிறது. வெளியூர்களுக்கு சென்று இ-பாஸ் மூலம் நீலகிரி திரும்பிய 1,190 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தனி அறையில் இருந்து, மற்ற நபர்களோடு பழகக்கூடாது. இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டி தனி வார்டில் தற்போது யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளிக்கூட மாணவர்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பு - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்
எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு உணவு பொருட்களின் தொகுப்பை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டியில் வழங்கி தொடங்கி வைத்தார்.
2. ஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு
ஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
3. 150 படுக்கை வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மகப்பேறு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
ஊட்டியில் 150 படுக்கை வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மகப்பேறு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
4. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 172 வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 172 வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
5. நீலகிரி மாவட்டத்தில், பூங்காக்கள் நாளை முதல் திறப்பு - சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வரலாம்
நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் நாளை (புதன்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வரலாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்து உள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-