சலவை தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்
தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சலவை தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 500 சலவை தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந் தது. 500 சலவைத்தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
இதில் நகர செயலாளர் செல்வம், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பீரங்கி வெங்கடேசன், இணை செயலாளர் மணிகண்டன், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் கதர்சீனு, நகர செயலாளர் இளஞ்செழியன், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட தலைவர் டாக்டர் பழனி, மாவட்ட மாணவரணி செயலாளர் சத்யசிவக்குமார், நகர அவைத்தலைவர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story