மாவட்ட செய்திகள்

வல்லநாடு அருகே பரிதாபம்: 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Pity near Vallanadu 9th grade Female student Suicide by hanging

வல்லநாடு அருகே பரிதாபம்: 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

வல்லநாடு அருகே பரிதாபம்: 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
வல்லநாடு அருகே 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவைகுண்டம்,


வல்லநாடு அருகே வசவப்பபுரம் கணேசன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணி. இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு முத்துராமலிங்கம் என்ற மகனும், இசக்கியம்மாள் (வயது 13) என்ற மகளும் இருந்தனர். இசக்கியம்மாள், நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் தாய் இறந்த துக்கத்தில் இசக்கியம்மாள் மனமுடைந்த நிலையில் இருந்தாள். அவள் நேற்று மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இசக்கியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்த துக்கத்தில் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.